ரூபவாஹினியின் கனடா வருகைக்கான எதிர்ப்பு என்பது நியாயமானது : அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கருத்து !

ரூபவாஹினியின் கனடா வருகைக்கான எதிர்ப்பு என்பது நியாயமானது : அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கருத்து !

சிறலங்கா அரச தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியின் கனேடிய வருகை கனேடிய தமிழ்சமூகத்தின் பொதுவெளியில் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

கனேடிய மண்ணில் இடம்பெற்றிருந்த 2017 ஐக்கிய நாடுகள் அமைதிபேண் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் சிறீலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கு கொள்வதை எதிர்த்தோமோ, அதே நிலையில் கனேடிய தமிழ் சமூகமும் தமிழ் அமைப்புக்களும் ரூபவாஹினியின் வருகையினை எதிர்த்தே ஆகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சிங்கள தேசம் நல்லாட்சி என்ற பெயரின் திட்டமிட்டவகையில் தொடர்ந்தும் தமிழர்களும் தமிழர்களின் உரிமையும் அழித்திட்க்கொண்டே செல்கிறது. அதேநேரத்தில் தங்கள் செயலுக்கு சவாலாக இருக்கும் புலம்பெயர் தமிழருடன் களியட்டங்களில் கும்மாளம் போடுவதன் மூலம் சிங்களவர்கள் தமிழர்களுடன் சமரசமாக இருப்பதாக சர்வதேசத்திற்கு காட்டி தப்பிக்கொள்ள முனைகிறது.
ரூபவாஹினி தமிழ் சேவையை வரவேற்பது நாம் தமிழ் ஊடகத்தை வரவேட்கிறோமோ அல்லது ஊடக சுதந்திரத்தை வரவேற்கின்றோமோ என்று எடுக்க முடியாது. ரூபவாஹினி ஊடகம் சிங்கள அரசின் நிறுவனம். இந்த நிறுவனம் அதில் சேவையாற்றும் தமிழர்களின் எண்ணப்படியே ஊடக தர்மப்படியோ இயங்கும் ஓர் தனிப்பட்ட நிறுவனம் அல்ல, மாறாக சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலையே செயல்படுத்தும் ஓர் கட்டுமானம்.

பொதுத்தளங்களில் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள், ‘ சிலோன் விளை மீன், சிலோன் நண்டு, சிலோன் பாரை, ஆனு உற்பத்தி பொருட்களை மட்டுமல்ல் மஞ்சி பிஸ்கேட்டையும் வாங்காமல் விட்டதில்லை; ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஐ நாம் புறக் கணித்ததில்லை; காலி முகத் திடலில் இன்றும் ஏயஉயவழைn ல் சென்று உலா வராமல் விட்டதில்லை,’ ஏன் ரூபவாஹினி வர முடியாது என்று. இவைகளில் பல தவிர்க்கவேண்டியவை தான். ஆனால் இதில் தமிழர் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டே ஆகவேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை தமிழர்களுடனும் தமிழர் தேசங்களிலும் மேற்கொண்டல் மிகவும் நன்று. அனால் ரூபவாஹினியை வரவெட்பத்தில் ஓர் தனி நபரோ ஒரு வியாபாரியோ இல்லாமல் தமிழர்களை பிரதிநித்துவப் படுத்தும் ஓர் அமைப்பு சம்பந்தப்பட்ட படியால் இந்த வரவேற்ப்பு தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் ஓர் பின்னடைவாகப் பார்க்கின்றேன். இந்த ரூபவாஹினியின் வருகையை நாம் அண்மையில் எப்படி 2017 ஐக்கிய நாடுகள் அமைதிபேண் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் சிறீ லங்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கு கொள்வதை எதிர்த்தோமோ அதே நிலையில் கனேடிய தமிழ் சமூகமும் தமிழ் அமைப்புக்களும் எதிர்த்தே ஆகவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.