அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  உலகப் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள்வரிசையில் அமெரிக்கத் தலைநகர் நியு யோக்கிலும் மாவீரர்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

மாவீரர்களை நினைவேந்தி கலைநிகழ்வுகள், உரைகள், கவிதைகள் என்பன நிகழ்த்தப்பட்டிருந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார்

இதேவேளை அவுஸ்றேலியாவின் பல்வேறு நகரங்களிலும் மாவீரர் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது என நா.தமிழீழ அரசாங்கத்தின் செயலகம் செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.

மெல்பேணலில் இடம்பெற்றிருந்த தேசிய மாவீரர் நாளில் நினைவுரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர்  டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.

பேர்த் நகரில் இடம்பெற்றிருந்த தேசிய மாவீரர் நாள் நிகழ்வில்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் கலந்து கொண்டு அவுஸ்திரேலியாக் கொடியினை ஏற்றியிருந்தார்.

பீரிஸ்பன் மாநிலத்தில்  உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனற்றர் பிரையன் சீவரட்னா அவர்கள் சிறப்புரை வழங்கியுள்ளார்.

இதேவேளை லண்டன் ஒக்போர்ட் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து மாவீரர்களை நினைவேந்தி

இருந்ததாகவும் செயலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை