சர்வதேசத்திடம் நீதி கோரி தாயக உறவுகளுடன் கைகோர்த்து மீண்டுமொரு முறை பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேசத்திடம் நீதி கோரி தாயக உறவுகளுடன் கைகோர்த்து மீண்டுமொரு முறை பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

தாயகத்தில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

தாயகத்தில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலத்தில் வாழுகின்ற மக்களை ஒன்றிணைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் பிரதமர் வாயிற்தளம் முன்பாக 22.10.2017 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 01:00 – 05:00 வரை ஒரு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  1. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கப்பட வேண்டும். 
  2. இராணுவம் அபகரித்து தம் வசம் வைத்துள்ள மக்களின் காணி நிலங்களை மீள கையளிக்க வேண்டும். 
  3. வலிந்து காணாமல் ஆக்கப்போர் தொடர்பாக உண்மையை கண்டறிய நம்பகத்தன்மையான விசாரணை நடைபெற்று விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். 

இந்த முன்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து மூன்று கோரிக்கைகளும் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்தும் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் குறிப்பாக பெருமளவான இளையோர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடையமாகும்.