சிறிலங்கா அதிபரின் போக்கினைக் அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவில் அதன் இராணுவத்தினரால் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுளார்கள். பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்; பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவற்றுக்கான நீதி கிட்டுமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

அதிபர் சிறிசேனா பெரும் செருக்கோடு தனது இராணுவ அதிகாரிகளுக்கு சட்ட விலக்கு வழங்கத் துணிந்துள்ளார். அனைத்துலக சமூகமும் இவ்வாறு இன அழிப்பு உள்ளடங்கலாக பாரிய யுத்தக் குற்றங்களை இழைத்தவர்களுக்கு சட்ட விலக்களிக்கும் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமலிருப்பதும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்துலக சமூகத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More…