தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30வது நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் இரத்த தான நிகழ்வு!

தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30வது நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் இரத்த தான நிகழ்வு!

தியாகி லெப் கேணல் திலீபன்  அவர்களின் 30வது நினைவு நாளினை முன்னிட்டு  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள் முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சும் விளையாட்டு மற்றும் சமூக நலத்துறை அமைச்சும் இணைந்து பிரித்தானியாவில் இரத்த தான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

அந்த வகையில் 17.09.2017, 24.09.2017 ஆகிய இரு நாட்களிலும் இரத்ததான நிகழ்வு உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள் என  60ற்கும் அதிகமானோர் இரத்த தானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாது ஏராளமான தேசிய செயற்பாட்டாளர்களும் இதில் இணைத்துக் கொண்டு செயற்பட்டனர்.

 

தியாகி லெப் கேணல் திலீபன்  

தமிழ் மாணவர்களுக்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட இன மத மொழி வேறுபாடுகள் தரப்படுத்தல் என்ற போர்வைக்குள் தமிழ் மாணவர்களை தள்ளி அவர்களை கல்வியில் பின்னடைய வைத்தது.

இதனாலேயே ஈழதேசத்தில் தமிழ் மாணவர்கள் போராட்ட  பாதையிலே உள்வாங்கப் பட்டார்கள் இவர்களில் ஒருவானாக இருந்தவர் லெப் கேணல் திலீபன் யாழ் இந்துக் கல்லூரியிலே மாணவனாக இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய போதும் அந்த மருத்துவ பீட வாழ்க்கையை துறந்து தன் தாய் நாட்டின் விடியலுக்காய் தமிழர்களின் விடிவுக்காய் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டார். இவரின் ஆளுமையின் காரணமாக தேசிய தலைவரினால் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதன் போது 1983ம் ஆண்டு 52 சிறைக் கைதிகளை சிங்கள காடையர்கள் திட்டமிட்டு அழிக்க மூலகாரணமாக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா உடனான ஒப்பந்தத்தினை இந்திய அரசு மேற் கொண்டு இருந்து. ஒப்பந்தத்தினை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஐந்து அம்ச கோரிக்கையினை முன் வைத்து நல்லூரில் வீதியிலே 1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி காலை 9:00 மணிக்கு தனது தியாக பயணத்தைஆரம்பித்து 26ம் திகதி காலை 10:57 ற்கு தமிழின விடிவிற்காய் ஈழதேசத்தில் இருந்து விடைபெறுகின்றார்.

யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு தியாகத்தினூடாக அற வழியில் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் சாகத் துணிந்த எம்மவர்களால் மட்டுமே முடியும்                                            என்பதனைஉலகிற்கு எடுத்து கூறியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.