தாயகத்தின் மக்கள் போராட்டங்களுக்கு தோழமை : அரசவையில் தீர்மானம் !

தாயகத்தின் மக்கள் போராட்டங்களுக்கு தோழமை : அரசவையில் தீர்மானம் !

இலங்கைத்தீவில் சிறிலங்கா அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில், முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் மக்கள் போராட்டங்கள் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் மக்கள் போராட்டங்களுக்கு, உறுதுணையாக புலம்பெயர் தேசங்களில் போராட்டங்களை முன்னெடுப்பதென இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் அகிலன் அவர்களினால் அரசவையில் முன்வைக்கப்பட்ட செயல்முனைப்புக்கு அமைய, பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் தீர்மானம் முன்வைக்கப்பட்டதோடு, புலம்பெயர் தேசங்களின் இதற்குரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மூன்றுபேர் அடங்கிய செயலணி ஒன்று அவையில் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 12ம் திகதி, பிரித்தானியாவிலும், கனடாவிலும் இப்போராட்டங்கள் இடம்பெற இருக்கின்ற நிலையில், மற்றைய நாடுகளது விபரங்கள் இச்செயலணியினால் அறிவிக்கப்படும்

நாதம் ஊடகசேவை