நிறைவுகண்டது முள்ளிவாய்க்கால் விழிப்புப் உந்துருளித்தொடர் பயணம் !

நிறைவுகண்டது முள்ளிவாய்க்கால் விழிப்புப் உந்துருளித்தொடர் பயணம் !

ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டன் வரையிலான முள்ளிவாய்க்கால் விழிப்புப் உந்துருளித்தொடர் பயணம் பிரித்தானியப் பிரதமர் வாயில் தளததில் நிறைவு கண்டது.

தமிழின அழிப்புக்கு நீதி கோரியும், இது தொடர்பில் பன்னாட்டு மக்களிடத்தில் ஓர் விழிப்பினை ஏற்படுத்தம் பொருட்டும் இம்முனைப்பு இட்டிபெற்றிருந்தது.

ஸ்கொட்லாந்திலிருந்து லண்டன் வரையிலான 517 மைல்களை 6 நாட்களில் எட்டியது.

இதில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் உள்ளிடோர் க்ளாஸ்கோ, பென்றித், மான்செஸ்டர், பேர்மிங்காம், கவுன்றி, மில்டன் கிங்ஸ் மற்றும் லூட்டன் வழியாக 6 நாட்கள் பயணித்து இறுதி நாளான நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நடைபெற்ற இலக்கம் 10 டவுனிங் வீதியை வந்தடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.