கொசோவோ பிரதிநிதி வழங்கும்  முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை !

கொசோவோ பிரதிநிதி வழங்கும்  முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை !

தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் இந்த நினைவுப் பேருரையினை கொசோவோ பிரதிநிதி  Dr. Alush Gashi அவர்கள் வழங்க இருக்கின்றார்.
கொசோவோவின் சுயநிர்ணய உரிமைக்கான பேராட்டத்தில் முக்கிய பங்கினை இவர் ஆற்றி இருந்ததோடு, கொசொவோவின் முதன் அரசுத் தலைவரது முதன்மை ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் ஏன்சலஸ் பல்கலைகழகத்தில் (University of California in Los Angeles,)  மே-18 நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைஇடம்பெற இருக்கின்றது.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் இந்நிகழ்வில்
பங்கெடுக்க இருப்பதோடு, பல பிரதிநிதிகளும் பங்கெடுக்க இருக்கின்றனர்.
Mullivaikkal Memorial Lecture